குற்றாலம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் 7வது ஆண்டு நினைவு தினம் .!
தென்காசி

குற்றாலம் பேரூர் திமுக சார்பில் கலைஞர் 7வது ஆண்டு நினைவு தினம்
தென்காசி ஆகஸ்ட் 7
தென்காசி மாவட்டம், குற்றாலம் அண்ணா சிலை அருகில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினம் குற்றாலம் பேரூர் திமுக சார்பில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு குற்றாலம் பேரூர் திமுக செயலாளர் சங்கர் என்ற குட்டி தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் புகைப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, வழக்கறிஞர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூர் திமுக துணை செயலாளர் முருகன், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம், அறங்காவலர் குழு உறுப்பினர் ஸ்ரீதர் பாண்டியன், வார்டு செயலாளர்கள் பால்ராஜ், முத்துக்குமார், சத்தீஷ் கணேஷ் சுரேஷ் குத்தாலிங்கம் ஆனந்த நாராயணன், பண்டாரசிவன், ராமர் ஆறுமுகம், பூபதி பாண்டியன், நெல்லை முத்துமாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்