தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கு முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கண்டனம். !

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கு முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கண்டனம். !

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு  முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கண்டனம் 

 கடந்த 22 .11 .2019 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் 33 வது மாவட்டமாக அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார்.

 அதன் பின்னர் கடந்த 10 12 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மலைப் பகுதியான ஆயிரப் பேரி ஊராட்சியில்  3 குளங்களுக்கு இடையில் இடம் தேர்வு செய்யப்பட்டது

 அந்த இடத்திற்கு  பொதுமக்கள் அரசு அலுவலர்கள் செல்ல முடியாது போக்குவரத்து வசதி கிடையாது கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஸ்ரத்தன்மை கிடையாது என்று பல்வேறு காரணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் பொது மக்கள் அதே இடத்திற்கு போகவே முடியாது என்கிற காரணங்களை முன்வைத்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். 

அதன் பின்னர் நீதிமன்றத்திற்கு நான் சென்று திமுக தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது

 அதன் பின்னர் 
10.12.2020 ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அலுவலக அனுமதி பெறாமல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட பணி துவங்கியது.

அன்றைய காலகட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியராக  சமீரன்  பொறுப்பில் இருந்தார்

 இதுபோல தான் அதிமுக ஆட்சி காலத்தில்  ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிக்கும் தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு அன்றைய சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன்  வனத்துறை அனுமதி பெறாமல்  விவசாயிகளிடம் நிலம் கையகப் படுத்தாமல் இழப்பீடு கொடுக்காமலும் நில அளவை செய்யாமலும் அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டினார்கள்

 பின்னர் 3 ஆண்டுகள் அனுமதி பெறுவதற்காக முயற்சி செய்து தற்போது  தமிழ்நாடு முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழக வனத்துறை  மற்றும் மத்திய வனத்துறை அனுமதி பெறப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

அதே போல தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் முறையாக அனுமதி பெறாமல் அன்றைய முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி  அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்  ஆட்சியாளர்களும் தவறு செய்துவிட்டு அதனை மறைத்து 

 தென்காசியில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிற பொழுது 

 எடப்பாடி பழனிச்சாமி  60% பணிகள்நிறைவு பெற்றிருக்கிற ராமநதி ஜம்பு நதி மேல் மாவட்ட கால்வாய் திட்டப் பணியை 

பணி நடைபெறுகிறது என்பது கூட தெரியாமல் நாங்கள்ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என்றுபொய்யாக பேசி சென்றுள்ளார்

தென்காசியில் அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க  முதலமைச்சருக்கு கையில் தெம்பு இல்லையா? கத்தரிக்கோல் கிடைக்க வில்லையா? என்று வாய்க்கு வந்தபடி வசனம் பேசி சென்றிருக்கிறார்

 அவருடைய பொய் புளுகு பித்தலாட்டம் தென்காசி மக்களிடம் எடுபடாது 

காரணம் அன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள்  செல்வ மோகன் தாஸ் பாண்டியன் ஆயிரப் பேரி பகுதியைச் சேர்ந்த அம்பை சட்டமன்ற உறுப்பினர்  இசக்கி சுப்பையா  கூட்டு சேர்ந்து  சுயலாபத்திற்காக காட்டுப் பகுதியை தேர்வு செய்ததையும்

 அதை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததையும் பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள்

 மேலும் அதிமுக ஆட்சியில் கமிஷனுக்காகவே ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் உரிய துறைகளில் அனுமதி பெறாமல் அவசர கோலத்தில் தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் 

எடப்பாடி பழனிச்சாமி  ஒவ்வொரு ஊருக்கு செல்லும் பொழுதும் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு செல்கிறார்

 தென்காசியில் அவர்பேசியது எடுபடாது என்பதையும்

 தமிழக முதல்வர்  கையில் தெம்பில்லையா? கத்தரிக்கோல் ? என்று அவதூறாக பேசியதையும் வன்மையாக கண்டிக்கிறேன்

 ராமநதி ஜம்பு நதி திட்டப்பணிகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முறையாக அனுமதி பெற்று அந்த பணி நடைபெற்று வருகிறது

அதிமுக ஆட்சி காலத்தில்அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் 4 வார காலத்தில் முறையாக அனுமதி பெற்று கட்டிடம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப் பட்டதை மறைத்து கட்டடத்தை கட்டியது அதிமுக அரசு என்பதை  எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

2006 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் 50,000 சதுர அடிக்கு கூடுதலாக கட்டிடம் இருந்தால் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி இருந்தும் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதனை தெரிந்து கொள்ளாமல் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்ததை எல்லாம் மறைத்து பொய் மூட்டைகளை அவிழ்த்து செல்லும் எடப்பாடி பழனிச்
சாமியை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்