டிரம்பிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் சொல்லித் தருகிறேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு. !

அமெரிக்கா - இந்தியா

டிரம்பிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் சொல்லித் தருகிறேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு. !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என எச்சரித்த நிலையில், இந்தியா மீது 25 சதவீத வரி விதித்தார்.

இருப்பினும், இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ததால், மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டதுடன், இப்பிரச்சனை முடிவடையும் வரை இந்தியாவுடன் எந்தவித வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்கா உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை, உலக பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், இரு நாடுகளும் பிரச்சனையை விரைவில் முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியா வருகை தர உள்ளதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டிரம்ப்பும் எனது நெருங்கிய நண்பர்கள். டிரம்ப்பை எவ்வாறு சமாளிப்பது என்பதில், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்குவேன்" எனக் கூறியதுடன், கூடிய விரைவில் இந்தியா வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், "இந்தியா - அமெரிக்கா உறவு மிக வலுவானது. அதைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளும் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இது இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் நல்லது" என வலியுறுத்தினார்.