சாத்தான் ஏவுககனை 2 ஏவப்போகும் ரஷ்யா- விளாடிமர் புதின்

சாத்தான் ஏவுககனை 2 ஏவப்போகும் ரஷ்யா- விளாடிமர் புதின்

மாஸ்கோ: 16,000 மைல் வேகத்தில் செல்லும் சாத்தான் 2 ஏவுகணைகளை போருக்கு தயார் செய்யும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

https://www.newstodaytamil.com/Cinema-ilayaraja-suri

இந்த சாத்தான் 2 ஏவுகணைகள் அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும்.

அணுசக்தி திறன் கொண்ட RS-28 சர்மட் என்ற ஏவுகணைதான் சாத்தான் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது. இது "உலகின் கொடிய ஆயுதம்" என்று அழைக்கப்படுகிறது. தற்போது உலகில் ஆக்டிவ்வாக இருப்பதிலேயே மோசமான போர் ஆயுதம் இந்த சாத்தான் 2 ஏவுகணைதான்.

திரவ எரிபொருளில் இயங்க கூடிய ஏவுகணை ஆகும் இது. இந்த ஏவுகணை தடுக்க முடியாத 15,880mph வேகத்தில் செல்ல கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பு ஆகும் இது. 14-அடுக்கு கோபுரம் போல உயரமானது இது. மொத்தமாக 208 டன் எடை கொண்டது இது. மொத்தமாக 10 அணு ஆயுதங்களை தலா 7 கிலோடன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது குறிப்பிடதக்கதாகும்.