காவேரிப்பட்டினம் ஒன்றியம், நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது .
கிருஷ்ணகிரி மாவட்ட பசுமைவாதி கோகுல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை காணொளி மூலம் மாணவர்களுக்கு விளக்கினார். சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. சர் சி வி ராமனின் முகமூடி அணிந்து கொண்டு மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மோரன அள்ளி பட்டதாரி ஆசிரியர் சேகர் சிறப்புரையாற்றினார்

விழாவிற்கான ஏற்பாடுகளை சாந்தி பட்டதாரி ஆசிரியை மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
