கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியில் நடைபெற்ற தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியில் நடைபெற்ற தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா. !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியில் நடைபெற்ற தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் தலைமையில் வெகு சிறப்பாக பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 73 வது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிழக்கு மாவட்ட செயலாளர் திரு மதியழகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பர்கூர் தொகுதிக்குட்பட்ட ஜெகதேவி ஊராட்சியில் ஜெகதேவி பேருந்து நிலையம் அருகே தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், 20 கிலோ கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது. பின்னர் அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, மீண்டும் 2026 இல் திமுக ஆட்சி மலர அனைவரும் கடினமாக உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் அறிஞர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி, ஒன்றிய கழக துணைச் செயலாளர் ராஜ் என்கின்ற ராஜதுரை, ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரூபேஷ், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் விக்னேஷ், PTAதலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், மகளிர் அணி சேர்ந்த மஞ்சுளா, ராதிகா, சங்கீதா, வசந்தா, ஜெயலலிதா, மற்றும் திமுக கழகத்தைச் சேர்ந்த ஆர்.நவாப், பயாஸ், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு, விக்ரம், ராமமூர்த்தி, ரமேஷ், மௌலி, ஐடி விங் அருண், சண்முகம், சீதாராமன், பாலகுமார், மகேந்திரன், விஜய், சாரதி, வேல்முருகன், பார்த்திபன், கணபதி, நவீன்குமார், முருகேசன், நஞ்சுண்டன், முனாவர், பாபு, பாலா, அப்பு, சுப்பிரமணி, உள்ளிட்டவர்களுடன் மாஸ்டர் ஹரித், நிஷாந்த், ராகேஷ், உமேஷ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ