நானே தப்பு பண்ணிட்டேன்னு அண்ணன் திருமா போன்ல சொன்னாரு" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா..!!
தேமுதிக
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் குறித்துப் பேசிய பிரேமலதா, திருமாவளவனுடன் தான் தொலைபேசியில் பேசிய ரகசியத்தை உடைத்தார்.
நேற்று காலையிலேயே அண்ணன் திருமாவளவன் என்னிடம் போனில் பேசினார். அப்போது அவரே, 'அம்மா, நான்தான் தெரியாம தப்பு பண்ணிட்டேன், கூட்டணியின் தலைமையில இருக்கிற அண்ணன் ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர்களை அறிமுகம் செஞ்சிருக்கணும், நான் செஞ்சிருக்கக் கூடாது' என்று வருத்தப்பட்டார்.
எங்களுக்குள் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. மற்றவர்கள் ஒப்பிடுவது போல, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூட்டத்தின் தலைமை என்பதால் அவர் அறிமுகப்படுத்தும் போது எழுந்து நின்று மரியாதை செய்வது இயல்பானது. ஆனால், திருமாவளவன் என் பக்கத்திலேயே அமர்ந்திருந்தவர், அவரிடம் நான் போனில் கூடப் பேசிக்கொள்வேன். அப்படி இருக்கும்போது இந்தச் சின்ன விஷயத்தை வைத்து திசை திருப்புவது தவறு" என விளக்கமளித்தார்.
