2-வது மனைவி.. இனி 2 பாமக- ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு..!
அரசியல்

ராமதாஸ் இணையரின் 50-வது திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் வெளியாகின.
இதில் சுசீலாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் பாமகவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பாமகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி வரும் சூழலில் அன்புமணி குடும்பத்துடன் திருப்பதி சென்றிருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. அன்புமணி- செளமியா இருவரும் இருக்கும் புகைப்படங்களை அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு காரணம், சமீபத்தில் வெளியான ராமதாஸிஸுடன் அவரது இரண்டாவது மனைவி சுசீலாவுடன் இருக்கும் புகைப்படம்.
ராமதாஸுடன் நீண்டகாலமாக இணைத்து பேசப்பட்டவர் செவிலியர் சுசீலா. இந்த சுசீலாவை மையமாக வைத்துதான் அப்பா- மகன் இடையேயான மோதலே வெடித்ததாக பாமகவில் கூறப்பட்டு வந்தது. இதுவரை சுசீலாவுடனான உறவை ராமதாஸ் வெளிப்படையாக காட்டிக் கொண்டதும் இல்லை.
அண்மையில் மாமல்லபுரத்தில், திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 'கால்டன் சமுத்திரா' ஹோட்டலில் சுசீலா-ராமதாஸ் இணையரின் 50-வது திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் வெளியாகின. இதில் சுசீலாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் பாமகவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாமக இரண்டு அணியாகத்தான் 2026 தேர்தலை சந்திக்கும் எனச் செல்லப்படுகிறது. கட்சியில் அப்பா- மகனுக்கு இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு இனி முடிவுக்கு வருமா? என்பது சந்தேகமே என்று அன்புமணி, ராமதாஸ் என இரு தரப்புமே சொல்ல ஆரம்பித்து இருக்கிறது. அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதும் அதை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அன்புமணி பொதுக்குழுவில் காலிச்சேர் போட்டு ராமதாசை அசிங்கப்படுத்தியதாக ராமதாஸ் தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது.
இந்த விவகாரம் உட்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது ராமதாஸ் தரப்பு. 7 நாட்களுக்குள் விளக்கம் தரவில்லை என்றால் சஸ்பெண்ட் செய்வோம் என அந்த நோட்டீசில் சொல்லப்பட்டிருக்கிறது. வரும் 31 ஆம் தேதி வரை கெடுவிதித்திருந்த நிலையில் இதுகுறித்து எந்த விளக்கம் தராமல் அன்புமணி தனது வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். முதல் கட்டமாக அன்புமணியை சஸ்பெண்ட் செய்ய தயாராகி வருகிறார் ராமதாஸ் என்கிறார்கள்.
அன்புமணிக்கு அளிக்கப்பட்ட செயல் தலைவர் பதவியை ராமதாஸ் தனது மகள் காந்திமதிக்கு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கூடவே பாமக மீது பாசம் காட்டுகிற திமுகவிடம், ''10.5% இட ஒதுக்கீட்டை உங்களால் கொடுக்க முடியும். இதற்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகிற அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து கொடுங்கள்'' என அறிவாலயத்திற்கு தூது விட்டிருக்கிறார் ராமதாஸ். அவரின் இந்தக் கோரிக்கையை திமுக பரிசீலனை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது எல்லாமே பாமக-திமுக கூட்டணிக்காகத்தான் என்கிறது தைலாபுரம் வட்டாரம்.