திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை .!

தஞ்சாவூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை .!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை (வ) ஒன்றியம் பி.ஜே.பி  சார்பில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை அருள்மிகு முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை  நடைபெற்றது.

பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வேட்டி சேலைகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில்  அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கார்த்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்டத் துணை தலைவர் துரைமூர்த்தி, சிறப்பு அழைப்பாளர் மாவட்ட பொதுச் செயலாளர் மல்லிகா, நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, பழனிச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்

பாபநாசம் இன்பம்