பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள கோவிந்தராஜ் எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!

கிருஷ்ணகிரி

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள கோவிந்தராஜ் எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள கோவிந்தராஜ் எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்து இருந்தார். இதன்படி, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அசோக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல வேப்பனஹள்ளி சட்ட மன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வரும் கே.பி. முனுசாமி மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பர்கூர் சட்ட மன்ற தொடுதிக்கு திமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்த கோவிந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகி அன்மையில் அதிமுக கட்சியில் தன்னை இணைத்து கொண்ட அவரருக்கு அதிமுக வேட்பாளராக அக்கட்சி தற்போது அதிமுக  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பர்கூர் சட்ட மன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ள கோவிந்தராஜ் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் முன்னதாக அதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் கோவிந்தராஜிக்கு உற்சாகமான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்தியாளர் 

மாருதி மனோ