25 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.!

அரசியல்

25 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.!
வன்னி அரசு

2026 -ல் விசிக வாக்கு வங்கி அடிப்​படை​யில் வலிமை மிக்​கதாக இருக்​கும். சட்டமன்ற உறுப்​பினர்கள் அதிகம் உள்ள கட்சியாக விசிக இருக்​கும். கட்டாயம் சட்டப்​பேர​வை​யில் இரட்டை இலக்​கத்​தில் விசிக உறுப்பினர்கள் இருப்​பார்​கள்​ என விசிக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் விசிக-​வின் இந்தப் பயணம் சாதா​ரண​மானது அல்ல. குரு​தி​யாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்​திருக்​கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்​கப்​பட்ட கட்சி​யாகி​யிருக்​கிறோம். இப்போது தமிழகத்​தின் திசைவழியை தீர்​மானிக்​கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டு​களுக்கு முன்பு விசிக-வை கூட்​ட​ணி​யில் சேர்த்​தால், தலித் அல்லாதவர்கள் வாக்​களிக்க மாட்​டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்​தது.

https://www.newstodaytamil.com/Maharashtra-CM-Patnavish-shiv-sena-uthav-thalkarey

அதனை மாற்றி இப்போது விசிக இருக்​கும் கூட்​ட​ணியே வெற்றி​பெறும் என்ற சூழலை உருவாக்கி​யுள்​ளோம். 2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப்​போன்ற கடைநிலை தொண்​டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்​.

ஆதவ் அர்ஜுனா எழுப்பிய ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் போன்ற முழக்கங்கள் விசிக-வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே?

விசிக-வில் உள்ள அனைவரின் விருப்பமுமே எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். எதார்த்த சுழலில் ஒரு தலித் முதல்வராக முடியாது என எங்கள் தலைவர் சொல்கிறார். ஆனால், இன்று அவரை தலித் தலைவராக பார்க்காமல், பொதுத்தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவருக்கான உயரத்தை அடையவைக்க நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது, அதற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டோம்.

திமுக-வின் ஆட்சி எப்படி உள்ளது?

இந்திய அளவில் மாநில உரிமைகள், மக்கள் உரிமை, திட்டங்கள் என எல்லாவற்றிலும் ரோல்மாடலாக உள்ளது திமுக ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் போன்ற பல முன்னோடி திட்டங்களை இந்த ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது. ஒரு மாநில கட்சியாக மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசோடு உரிமையோடு சண்டையிட்டு மாநில உரிமைகள், நிதிபங்கீட்டை போராடிப் பெறுவதில் சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதேசமயம் மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறியுள்ளதா என்றால் அது இல்லை. வரும் காலத்தில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.