த மு மு க. மருத்துவ அணி சார்பில் இலவச கண்சிகிச்சை மற்றும் பொது சிகிச்சை முகாம்.!
மேட்டுப்பாளையம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி & தேசிய பார்வை இழப்பு தடுப்பு சங்கம் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் சுபா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் அறிவொளி நகர் கிளை தலைவர் சல்தீன் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ முகாமை தமுமுக-மமக மாவட்ட தலைவர் மு.அப்துல் ஹக்கீம் , சுபா மருத்துவமனை M.D. டாக்டர் மகேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி மமக 6 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல்ஹக்கீம் M.C சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தமுமுக மாவட்ட செயலாளர் J.V.அப்துல் நாசர், தமுமுக-மமக மாவட்ட செயலாளர்கள் முஹம்மது சேட் , பக்கீர் முஹம்மது சேட், அன்னூர் சாகுல் அமீது, SMI மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தொண்டர் அணி முஹம்மது குட்டி ,தமுமுக நகர செயலாளர் சாதிக், மமக நகர செயலாளர் ஜுபைர் , தமுமுக நகர பொருளாளர் ரபி, மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தவ்பிக்,
மாவட்ட பொருளாளர் முஹம்மது நசீர்,
மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ்,
அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் ஆகியோர் முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்தனர் .
கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமில் 100 - ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மு.ர.