மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை மோட்டார் உதிரி பாகம் வியாபாரிகள் சங்கம் உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை மோட்டார் உதிரி பாகம் வியாபாரிகள் சங்கம் உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சார்பில் மேட்டுப்பாளையம் பழைய இரும்பு கடை மோட்டார் உதிரி பாகம் வியாபாரிகள் சங்கம் உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் டு சிறுமுகை சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சங்கர் நகர் முதல் சிராஜ் நகர் வரை சாலை இருப்புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களை அகற்றுவது தொடர்பாக பழைய இரும்பு கடை மோட்டார் உதிரிபாகன வியாபாரிகள் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மோட்டார் உதிரி பாகம் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் சின்ன காமனன் தலைமையில் நடைபெற்றது.

இதில் இரு புறமும் நிற்கவைக்கப்பட்டுள்ள வாகனங்களை எடுப்பதற்கு இரு நாட்கள் அவகாசம் அளிக்குமாறும் இரு நாட்களுக்குள் எடுத்து விடுவதாகவும் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

முகமது ரபி ( MR ) 

செய்திகள் விளம்பர தொடர்பிற்கு

97 87 416 486