சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் ஆண்டு விழா
கீழக்கரை
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையின் பாரம்பரியமிக்க பள்ளிகளில் ஒன்றானதும் முக்கியமானதுமான சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் 100 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி ரியாசைன் அவர்கள் கிராத்துடன் ஆரம்பமான நிகழ்ச்சியானது பள்ளி கல்வி குழு தலைவர் சேக் உசேன் தலைமையிலும், சிறப்பு விருந்தினராக கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மால் செயலாளர் முகைதீன் தம்பி, தொழிலதிபர் டாக்டர் சதக் அப்துல் காதர், சென்னை கணணி பொறியாளர் பிலால் அப்துல்லா ( ஃபுரபஷர் ), பள்ளி தாளாளர் ஜக்கரியா, முன்னால் தாளாளர் ஜமாலுதீன், கீழக்கரை சார்பு ஆய்வாளர் சால்மோன், மக்கள் டீம் காதர், மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.
வருகை புரிந்த அனைவருக்கும் பள்ளி நிர்வாக உதவியாளர் செய்யது இபுறாகீம் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது.
செய்தியாளர்
அப்துல் காதர்