ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்.!
ஓசூர்
ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்.!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்றத் தொகுதி, அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, ஓசூர் அதிமுக பகுதி செயலாளர் ராஜு தலைமையில் ஓசூர் காந்தி சிலை அருகே அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.
அதிமுக, பாஜக ,பாமக, ஆமாமுக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கூடி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையால் ஓசூர் பகுதியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்வோம்" என நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், ஆமா முக கட்சி மாவட்ட செயலாளர் மரோ கௌடா, அதிமுக ஓசூர் பகுதி செயலாளர் வாசுதேவன், அசோக ரெட்டி, ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி, மண்டல சேர்மன் ஜெயப்பிரகாஷ், முன்னாள் சேர்மேன் ராமு, ஓசூர் மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி ஹேமகுமார், தில்ஷாத் ரகுமான், குபேரன் சங்கர், மல்லிகா தேவராஜ், கலாவதி சந்திரன், சந்திரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் நாராயண ரெட்டி, நந்தகுமார், சரஸ்வதி நடராஜன், ராஜன் பக்ஷு பாய், மாவட்ட பிரதிநிதி அசோக் என்கிற லக்ஷ்மன், இளைஞர்களும் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் பிரசாந்த், சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் முபாரக், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் சந்தோஷ், மாதையன், சாமிநாதன், பேரவை மாவட்ட இணை செயலாளர் செல்வம், வட்ட செயலாளர்ள் கோபால ராமச்சந்திரன், ஆனந்தபாபு, சீனிவாசன் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் யோகேஷ் ரெட்டி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
.
