தூய்மைப் பணியாளர்கள் 300 பேருக்கு இலவச வேஸ்டி, சேலைகளை காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்.!

கிருஷ்ணகிரி

தூய்மைப் பணியாளர்கள் 300 பேருக்கு இலவச வேஸ்டி, சேலைகளை காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்.!

வேப்பனஹள்ளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் 300 பேருக்கு இலவச வேஸ்டி, சேலைகளை காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் திம்மப்பா வழங்கினார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தடத்தரை என்ற கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ பெளழமலை ஸ்ரீ பால முருகன் ஶ்ரீ வள்ளி தெய்வானை திருக்கோவிலில் பங்குனி திருநாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பூஜைகள் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் திம்மப்பா தலைமையில் நடைபெற்றது,

இதில் சமேதராக வீற்றிருக்கும் ஸ்ரீ பெளழமலை ஸ்ரீ பால முருகன் ஶ்ரீ வள்ளி தெய்வானைக்கு பால், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரப் பூஜைகள் மற்றும் கற்பூர தீபாராதனைகளும் நடைபெற்றது,

இதனைத் தொடர்ந்து வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட 
10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தூய்மைப்பணியாளர்களின் தியாகப் பணிகளை பாராட்டும் விதமாக 300 தூய்மைப் பணியாளார்களுக்கு  இலசமாக வேஷ்டி மற்றும் புடவைகளை தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் திம்மப்பா வழங்கி அனைவருக்கும்  அன்னதானம் வழங்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முனிராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வாசு மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைகர் பிரேம்குமார், நாகப்பா, ராமண்ணன், முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து
கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ