சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி தகுதி;

வேலைவாய்ப்பு

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி தகுதி;

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆடியோமெட்ரீசியன் (Audiometrician)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Audiometrician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,250

பேச்சு சிகிச்சையாளர் (Instructor for the Young Hearing Impaired Speech Therapist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor of Audiology and Speech Language Pathology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,000

நிரல் மேலாளர் (Siddha District Programme Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/12/2024121345.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம் - 631501