தகவவ் அறியும் உரிமைச் சட்டம் - 2005 பாகம் - 1
சட்டம்

மத்திய, மாநில அரசு மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அவற்றின் ஒளிவு மறைவற்ற நிலை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காகவும், அவற்றைப் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005.
பெறக்கூடிய தகவல்கள் ( பிரிவு ) 2 ( F )
தகவல் என்பது மத்திய, மாநில அரசுகள் சார்ந்த பதிவுருக்கள், ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், பயணக் குறிப்புகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரி படிவங்கள், மின்னணு வடிவம் எதிலும் வைக்கப்பட்டிருக்கும் தகவல் விபரங்கள் மற்றும் அப்போதைக்கு செயல்பாட்டில் உள்ள வேறு சட்டம் எதன்படியும், பொது அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் குழுமங்கள் குறித்து எந்த வடிவத்திலும் உள்ள விபரங்கள் அனைத்தும் தகவல்கள் ஆகும்.
மேலே சொல்லப்பட்ட தகவல் என்ற பெயரில் உள்ள அனைத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற முடியும்.
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் -1993 பாகம் - 4
மு.ர.
தொடரும்
சட்டம் சார்ந்த விசயங்களை நியூஸ் டுடே தமிழ் சட்டம் பகுதியை பார்க்கவும் வாசகர்களே.!