கரூரில் அதிமுக - வில் இருந்து விலகி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக - வில் இணைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள்

கரூரில் அதிமுக - வில் இருந்து விலகி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக - வில் இணைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள்

கரூர் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் உட்பட பலரும் அதிமுக - வை விட்டு விலகி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக - வில் இணைந்தனர்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கீழ்பாகம் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில், ரஞ்சித்குமார் ( வார்டு பிரதிநிதி ), ராஜேஷ்குமார் ( வார்டு பிரதிநிதி ), அன்பு ( வார்டு பிரதிநிதி ), எஸ்.கண்ணையன், ஆர்.கருப்பண்ணன், ஆனந்தி, சினேகா, ஈஸ்வரி, நிஷாந்தினி,  செல்வன், நித்திஷ், சண்முகப்ரியா, சங்கீதா, லதா, மாரிமுத்து, ஆதிஷ், செல்வன்.வி.பிரவீன்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.