கரூரில் 13 கோடி மதிப்பிலான இணைப்பு சாலை.!

கரூர்

கரூரில் 13 கோடி மதிப்பிலான இணைப்பு சாலை.!
அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் இணைப்பு சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

கரூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மோகனூர்-வாங்கல் சாலை முதல் வெங்கமேடு-காமதேனு நகர் வழியாக சேலம் பழைய நெடுஞ்சாலை வரை இணைக்கும் வகையில், ரூ 13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலையை இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )