தலித் விடுதலை இயக்கம் சார்பில் பட்டா நிலத்தில் கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு .!

தென்காசி

தலித் விடுதலை இயக்கம் சார்பில் பட்டா நிலத்தில் கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு .!

தலித் விடுதலை இயக்கம் சார்பில் பட்டா நிலத்தில் கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்பாளரை
அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசி செப் 11

தலித் விடுதலை இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் கருப்பையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோரிடம் பட்டா நிலத்தில் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளரை அகற்றக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகா, பனையூர் வயலி பட்டா கிராமத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் சர்வே எண் 503/1A, 503/3 D என்ற நிலத்தில் சுமார் 2 ஏக்கரில் 25 ஆண்டுகளாக அமைந்துள்ளது. மேற்படி நிலம் 1989 ல் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலமாக 1990 ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத 50 ஆதி திராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர்.

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய நிலத்தில் வீடு கட்டிக் கொள்ளவும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய 2 ஏக்கர் இடத்தை சுற்றிலும் நான்கு பக்கமும் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்திருப்பதால் வீடுகள் கட்ட ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் 1990 முதல் 10 ஆண்டுகளாக ஊர் மக்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.

இந் நிலையில் 2000 ஆம் ஆண்டு வயலி பட்டா கிராமத்தில் வசிக்கும் குருநாதன் என்பவர் சிறு பத்திரகாளி அம்மன் சிலையை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறுக சிறுக இக்கோவிலை புதுப்பித்து 2013ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 3 ஆண்டுகளில் 2 ஏக்கர் ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிலம் முழுவதையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து கோவிலையும் கட்டியுள்ளார்.மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் 27 3 2025 ல் உத்தரவிட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையினரால் பட்டியலின மக்களுக்கு 1989 ஆம் ஆண்டில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தை எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் முழு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டி உள்ள குருநாதன் மீதும் உயர்நீதிமன்ற உத்தரவினை நடைமுறைபடுத்தவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு எட்வர்ட், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாதுரை, மின்னல் வரதன், புலிப்படை பழந்தமிழர், திராவிடத் தமிழர் கட்சி முத்து, தலித் விடுதலை இயக்கம் பீமாராவ், வைரவன், ஜஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்