குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் .!
தென்காசி

குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம்
தென்காசி அக் 07
பாஜக மோடி அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடை பெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
முன்னாள் எம்பி ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், சிலுவை, ஆலடி சங்கரைய்யா, கொடிக் குறிச்சி முத்தையா, சட்டநாதன், பால்துரை, உதய கிருஷ்ணன், சங்கை கணேசன், எஸ் ஆர். சுப்பிரமணியன், திருஞானம், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ முதல் கையெழுத்து செய்து கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சண்முகவேல், லட்சுமணன், சர்புதீன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், சந்தோஷ், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், குமார் பாண்டியன், தினகரன், முருகையா, மகேந்திரன், அழகு துரை, கணேசன், சுந்தர்ராஜ், அய்யாத்துரை, மகாராஜா, ரூபன், நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், பால்ராஜ், ஜெயபால், ராமர், உமாசங்கர், துணை அமைப்பு மாவட்ட தலைவர்கள் தாயார் தோப்பு ராமர், ராஜாராம், ராமச் சந்திரன், சுரேஷ் இளவரசன், சலீம், பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் சிங்கக்குட்டி, முப்புடாதி பாண்டியன், முருகன், முருகேசன், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி புஷ்பவல்லி, சேர்மக்கனி, கவுன்சிலர்கள் மேரி மாதவன், ராதா குமாரி, அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரபிக், சுப்பிரமணியன், ராஜசேகர், மாவட்ட நிர்வாகிகள் டி கே பாண்டியன், சேர்மச்செல்வன், சுப்பிரமணியன், பரமசிவன், தெய்வேந்திரன், ஆயக்குடி பெரியசாமி, ரவி, முகமது ரபி, ஆறுமுகம், செல்லப்பா, மஸ்தான், சங்கர், மாரிமுத்து, ராஜீவ் காந்தி, ஜெயச்சந்திரன், கந்தையா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்