பா ம க அழைத்தால் கூட்டணி பற்றி முடிவு செய்யலாம் - நாம் தமிழர் சீமான்.!
கடலூர்

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கூட்டணியில் இருந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும் என்பது இல்லை. உயர்ந்த கொள்ளை, உயர்ந்த நோக்கம் தான் தேவை. கூட்டணியில் இருந்தால் தன்னுரிமை போய்விடும். திராவிட கட்சிகளை தவிர்த்து வேறு கட்சி வந்தால் ஏற்றுக் கொள்வோம். அனைவரும் "சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீர்கள். இனி தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்". நான் ஆட்சிக்கு வரும் போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். தமிழகத்தில் பெய்யக்கூடிய மழைநீரை சேமித்து வைக்க முடியவில்லை. நீர்த்தேக்கத்தை கட்டாமல் 5 ஆயிரம் ஏக்கரில் எதற்கு விமான நிலையம்?. நீர்த்தேக்கத்தை கட்டினால் மக்களே அதற்கான இடத்தை தருவார்கள். எது முக்கியம், எது வளர்ச்சி என்று அரசுக்கு தெரியவில்லை.
எனது கட்சியில் இருந்து விலகுபவர்களை வேறு கட்சிக்கு செல்வதற்கு பதிலாக, விஜய் கட்சிக்கு செல்லுங்கள் என்று தான் ஏற்கனவே கூறினேன். ஏனெனில், அவர் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று தெரிந்து தான் சொல்கிறேன். மேலும் என்னுடைய கோட்பாடுகள் நன்றாக இருக்கிறது என்று அறிந்து என்னோடு சேர்ந்து நிற்க வந்தால், அதுவும் இந்திய திராவிட கட்சிகளை தவிர்த்து வந்தால் சேர்க்க யோசிக்கலாம். 2026-ம் ஆண்டு தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தான் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். கூட்டணியை வைத்து சாதித்த கட்சிகள் இல்லை. நிரந்தர வெற்றிக்காக தற்காலிக தோல்வியை மறந்து 5-வது முறையாக தனித்து நாங்கள் போட்டியிடுவோம். அதில் அசாத்திய வளர்ச்சியை பெறுவோம். பா.ஜனதா கூட்டணிக்கு வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்தார்கள் என்பதை சொல்ல வேண்டியது அதிமுகவின் பொது செயலாளர் தான். எடப்பாடி பழனிசாமி, செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், தம்பிதுரை அவர்கள் யாரேனும் சொல்கிறார்களா?. அப்படி அவர்கள் சொன்னால் கூட்டணியில் சேர பா.ஜனதாவினர் கட்டாயப்படுத்தினர் என கூறலாம்.
கூட்டணியில் சேர்ந்ததும், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று அனைவரும் விருந்து சாப்பிட்டுள்ளார்கள். அதனால் அதுபற்றி புரளி பேசவேண்டாம். டாக்டர் ராமதாஸ், அன்புமணி பிரச்சினை சொந்த கட்சி பிரச்சினை. அது பேசி தீர்க்கப்படும். மே 11-ந் தேதி நடக்கும் மாநாட்டில் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். அதில் எனக்கு அழைப்பு வந்தால் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுவேன். ஏற்கனவே நான் அவருடன் இருந்து வந்தவன் தான்" என்றார்.