தனுஷ் நடித்து வெளியான குபேரா, கலக்கியதா இல்லை மற்றப் படங்களைப் போல் சொதப்பியதா?
குபேரா

நடிகர் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் குபேரா.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக நாகார்ஜுனாவும் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். நிகேத் பொம்மி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கார்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் ஸ்ரீ வடிவமைத்து இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. இப்படம் மூன்று மணிநேரம் 2 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டது. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.அமெரிக்காவில் இத்திரைப்படம் இன்று அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. அங்கு இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குபேரா ட்விட்டர் விமர்சனம்
குபேரா திரைப்படத்தில் தனுஷ் ஆஸ்கர் லெவல் பெர்பார்மன்ஸை கொடுத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக உள்ளது. தனுஷுக்கு முதல் 300 கோடி வசூல் படமாக குபேரா இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான படங்களில் குபேரா சிறந்த படம். இது சேகர் கம்முலாவின் படம், தனுஷின் மாஸ்டர் பீஸ் திரைப்படம், நாகார்ஜுனாவின் விஸ்வரூபம் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தாண்டவம். கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் படம் ஒர்த். ஒரு சீன் கூட படத்தில் போர் அடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குபேரா பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு கிரைம் டிராமா படமாக உள்ளது. இரண்டு பாதியிலும் நல்ல காட்சிகள் உள்ளன. ஆனால் சீரற்ற வேகத்தில் செல்லும் இப்படம் மிகவும் நீளமானதாக உள்ளது. தனுஷ் தன்னுடைய கெரியர் பெஸ்ட் நடிப்பை கொடுத்துள்ளார். அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் சுவாரஸ்யமான கதைக்களமும் சில நல்ல காட்சிகளும் உள்ளன. எப்போதும் போல இயக்குனர் சேகர் கம்முலா ஆரம்பத்தில் இருந்தே கதையோடு ஒன்ற வைக்கிறார். இருந்தாலும் தொய்வான எடிட்டிங், படத்தின் ரன் டைம், திடீரென வரும் ப்ரீ கிளைமாக்ஸ் ஆகியவை அதற்கு பின்னடைவாக அமைந்துள்ளன.
இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாகர்ஜுனாவும் நன்றாக நடித்துள்ளார். ராஷ்மிகா அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். டிஎஸ்பியின் இசை நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. படத்தை தாங்கி செல்ல உதவி இருக்கிறது. புரொடக்ஷன் வேல்யூ அருமை. சேகர் கம்முலாவின் முந்தைய படங்கள் போல இது எமோஷனலாக டச் ஆகாவிட்டாலும் தனித்துவமான காட்சிப்படுத்துதல் மற்றும் சில நல்ல தருணங்களுக்காக இப்படத்தை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.