கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 30.03.2026 முதல் 06.04.2026 வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்  (27.03.2026) நடைபெற்றது. 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ