அரசு உயர்நிலைப் பள்ளி நாட்டாண்மை கொட்டாயில் 77வது குடியரசு தின விழா.!
கிருஷ்ணகிரி
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், அரசு உயர்நிலைப் பள்ளி நாட்டாண்மை கொட்டாயில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை ஆசிரியை திருமதி மணிமேகலை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி கன்னியம்மாள் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாட்டுப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட மன்ற போட்டிகள் மற்றும் கலைத் திருவிழாவில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் ராமநாதன் சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு ஸ்கேல் ஃபைல் போன்ற எட்டு பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
