இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம். !

கிருஷ்ணகிரி

இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுபவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம். !

கிருஷ்ணகிரி அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள போத்தநாம்பட்டி கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பு இளைஞர்களுக்கும் அடிக்கடி அடிதடி, சண்டை வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் பொங்கல் திருவிழாவின் போது மற்றொரு தரப்பு இளைஞர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் போத்தநாம்பட்டி இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் அந்த இளைஞர்கள் இரவு நேரத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் ஊருக்குள் வந்து மிரட்டி செல்வது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதால் பாதிக்கப்பட்ட போத்தநாம்பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி கிருஷ்ணகிரி குப்பம் சாலையின் சாலை மறியல் போராடத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டதால், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மகாராஜ கடை காவல் ஆய்வாளர் சேகர் தலைமையில் போலீசார் பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் இதை ஏற்காத கிராம மக்கள் கிராமத்திற்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி வரும் நபர்களை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியதால் மீண்டும் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடந்து மாவட்ட கூடுதல் காவல் கண்கணிப்பாளார் சங்கர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

அப்போது போத்தநாம்பட்டி இளைஞர்களை தாக்கிய நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து பேசிய போத்தநாம்பட்டி கிராம மக்கள்.... 
இரவு நேரங்களில் ஊருக்குள் கூர்மையான ஆயுதங்களுடன் வந்து மிரட்டல் விடுத்து செல்கின்றனர், அப்போது தட்டிக் கேட்கும் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வருவதால் இரவு நேரங்களில் ஊரில் யாரும் நடமாட முடியாத நிலை உள்ளது. 

ஆகையால் கொலை வெறி தாக்குதலுடன் சுற்றித்திரியும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லையில் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ