சமத்துவபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கன்று விடும் விழா.!

கிருஷ்ணகிரி

சமத்துவபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கன்று விடும் விழா.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள சமத்துவபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சமத்துவபுரத்தில் முதலாம் ஆண்டு  மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் பர்கூர், காளிகோவில், வேப்பனப்பள்ளி, குருநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, தர்மபுரி, திருப்பத்தூர்,  இராயக்கோட்டை, பூவத்தி, சிக்கப்பூவத்தி, ஒசூர்  என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 250 கன்றுகள் பங்கேற்றிருந்தன. அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட்ட இந்த கன்று விடும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து கன்றுகளும்  வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஒவ்வெரு கன்றுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில்100 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களும்  வழங்கப்பட்டது. இந்த கன்று விடும்  விழாவினை ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட கன்றுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள்.

இந்த கன்று விடும் விழாவினை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.