ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா.!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா.!

ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா.

30.01.2026. வெள்ளிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி நகரம், புதுப்பேட்டை, சீனிவாசா காலனியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

இநிகழ்வுக்கு வெங்கடேஸ்வரா அறக்கட்டளை தலைவர் சிவப்பிரகாஷ் தலைமையேற்க,  சித்தா நடராஜன் மற்றும்  கண்ணகி, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நாட்ரம்பள்ளி, இராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீமத் சுவாமி பாரம்பிகானந்தா மற்றும் பணி நிறைவு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின்  நாராயணன்,  தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க செயலாளர் ரமேஷ் குமார், கிருஷ்ணகிரி அரிமா சங்கத்தின் பொருளாளர் அரிமா பாண்டியன் பெருமாள், கிருஷ்ணகிரி கம்பன் கழக பொருளாளர் மு.ஸ்ரீரங்கன்,  யோகேஸ்வரன், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியின் தாளாளர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதோடு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில்  கபீஸ் குமார் நன்றி உரை ஆற்றினார்.

ஆண்டு விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, சூர்யா கலா, அனிதா, ஜெயகாந்தா, ரூபாவதி, மணிகொடி, பிரியா, ஆனந்த லட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ