கந்திகுப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்  திட்ட மூன்றாம் கட்ட முகாம்  நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி

கந்திகுப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்  திட்ட மூன்றாம் கட்ட முகாம்  நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் வடக்கு ஒன்றியம் கந்திகுப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்  திட்ட மூன்றாம் கட்ட முகாம்  நடைபெற்றது.

இந்த  திட்ட முகாமில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.கணேசன் அவர்களும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்,MLA., அவர்கள் கலந்து கொண்டு, குடியிருப்பு  பகுதிகளில் உள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள் .

உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப அவர்கள் மற்றும் அரசு அலுவலர்க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், BLA-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு  பொதுமக்களின் தேவையான மனுக்களை பெற்று கணினியில் பதிவு செய்தார்கள்.

மாருதி மனோ