கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட  ஆடிட்டர் பி.சி.வடிவேல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது விருப்ப மனுவினைக் கொடுத்தார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட  ஆடிட்டர் பி.சி.வடிவேல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது விருப்ப மனுவினைக் கொடுத்தார்.!

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட  ஆடிட்டர் பி.சி.வடிவேல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது விருப்ப மனுவினைக் கொடுத்தார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது தொகுதிக்கான விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இதன் அடிப்படையில் பர்கூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் பி.சி. வடிவேல் 2026-ல் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதி மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வகையில் சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வம் அவர்களை நேரில் சந்தித்து
தனது விருப்ப மனுவினை வழங்கினார்.

அப்போது வட்டார காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ