இறைச்சி  கழிவுகளை ராட்ஷசக்குக்கர்களில் வேகவைக்கும் போது வெளியேறும் நாற்றத்தினால் மூச்சித்தினரால் குடியிருக்க முடியவில்லை என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு .!

கிருஷ்ணகிரி

இறைச்சி  கழிவுகளை ராட்ஷசக்குக்கர்களில் வேகவைக்கும் போது வெளியேறும் நாற்றத்தினால் மூச்சித்தினரால் குடியிருக்க முடியவில்லை என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு .!

கிருஷ்ணகிரி அருகே பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் இறைச்சி  கழிவுகளை ராட்ஷசக்குக்கர்களில் வேகவைக்கும் போது வெளியேறும் நாற்றத்தினால் மூச்சித்தினரால் குடியிருக்க முடியவில்லை என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள இட்டிக்கல் அகரம் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் நிறைந்தப் பகுதியில்  பிரகதி என்ற தனியார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் சென்னை, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்து வரப்படும் இந்த இறைச்சி கழிவுகளை ராட்ஷச குக்கர்களில் வேகவைத்து காய வைக்கும் போது வெளியேறும் நாற்றத்தினால் வீடுகளில் குடியிருக்க முடியாத நிலையில் மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்படுதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதால் மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குடியிருப்பு அருகில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நாற்றத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்படுவதால், இந்த தொழிற்சாலையை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனுவினைக் கொடுத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய கிராம மக்கள் குடியிருப்பு பகுதியில் பிரகதி என்ற தொழிற்சாலை அமைக்கும் போது கேட்ட போது கோழி இறைச்சியை பேக்கிங் செய்து வெளி மாநிலங்களுக்கும் அனுப்புவதாகவும், இதனால் இப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்புகளும் வராது என்று கூறி விட்டு தற்போது சென்னை பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் எடுத்து வரப்படும் கோழி இறைச்சி கழிவுகளை ராட்சஷக் குக்கர்களில் வேகவைக்கும் போது  வெளியேறும் நாற்றத்தினால் மூச்சு திணறல் மற்றும் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கேட்டால் முறையான பதில் தருவது இல்லை, ஆகையால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த தொழிற்சாலையை வேற இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ