துரை மாடர்ன் சிபிஎஸ்இ பள்ளியில்  தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம்..!

கிருஷ்ணகிரி

துரை மாடர்ன் சிபிஎஸ்இ பள்ளியில்  தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம்..!

துரை மாடர்ன் சிபிஎஸ்இ பள்ளியில் 
தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, தண்ணீர் பள்ளம், துரை மாடர்ன் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியில்  பள்ளி முதல்வர்  மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் வரவேற்புரை ஆற்றினார். நிர்வாக இயக்குநர்  அ.சிந்து முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு தன் சுத்தம் பற்றி கலந்துரையாடினார்.  

நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் திரு து.மணி அவர்கள் தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராக ஜெகதேவி துணை சுகாதார நிலையம், குழந்தை நல மருத்துவர் மணிகண்டன் அவர்கள், உடல் நலத்தை பற்றியும் எப்படி உடலை பராமரிக்க வேண்டும் என்பதை பற்றியும் தெளிவாக மாணவ மாணவிகளுக்கு இடையே கலந்துரையாடினார்.

விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.