அதிமுக நகர கழகத்தின் சார்பில் கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பேரூர் அதிமுக நகர கழகத்தின் சார்பில் கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காவேரிப்பட்டணம் சரோஜினி மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி. BABL.MLA, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் அவர்கள், சேலம் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் நிர்மல் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர்.


முன்னதாக விழாவிற்கு காவேரிப்பட்டணம் நகர கழக செயலாளர் M.விமல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை KPM.சதீஷ்குமார், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பையூர் பி.ரவி,கிருஷ்ணகிரி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், நகர அவைத் தலைவர் வேணுகோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
