அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவகல்வி (ம) ஆராய்ச்சி துறையின் 60-ம் ஆண்டின் நினைவாக வைர விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவகல்வி (ம) ஆராய்ச்சி துறையின் 60-ம் ஆண்டின் நினைவாக வைர விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி (ம) ஆராய்ச்சி இயக்குநரகம் (DME & R) 1966 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தனி இயக்குநரகமாக நிறுவப்பட்டது.
மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME & R) என்பது மருத்துவத் துறையில் கற்பித்தல், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பயனாளர்கள் கவனிப்பில் கவனம் செலுத்துவதற்காக 1966 ஆம் ஆண்டில் மருத்துவ சேவைகள் இயக்குநரகத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் துணை மருத்துவத்தில் மருத்துவர்கள் (ம) மருத்துவம் சார்ந்த தொழிற்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்களை உருவாக்குவதற்கும், உயர் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட கற்பித்தல் (ம) ஆராய்ச்சி இயக்குநரகமாகவும் மற்றும் பரிந்துரை மையங்களாக செயல்படவும் (Referral Centers) நிர்வகிப்பதற்கும் பொறுப்பான ஒரு முக்கிய துறையாக (DME & R) உள்ளது.
மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (DME&R) 60ம் ஆண்டினை நினைவு கூறும் விழாவாக வைர விழா கொண்டாட்டத்தை , கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இன்று 15.11.2025 -ல் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியினை மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் K.சத்யபாமா M.S., அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார்கள். மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் P.சந்திரசேகரன் D.M., (Neuro) அவர்கள், துணை முதல்வர் மருத்துவர் R.P.சாத்விகா M.D., (Bio) அவர்கள், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. M.செல்வராஜ், பேராசிரியர்கள் உமாமகேஸ்வரி, சங்கமேஸ்வரன், பல்வேறு துறைகளின் இணைபேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் S.K.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் மருத்துவ மாணவ, மாணவியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
வைர விழாவை முன்னிட்டு MBBS மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மருத்துவம் சார்ந்த ரங்கோலி போட்டிகள், மீம்ஸ், சுவரொட்டி, கவிதை போட்டிகள், மற்றும் ரீல்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மருத்துவ மாணவர்கள் தங்களது படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் (ம) பேராசிரியர்கள் வெற்றியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி கிருஷ்ணகிரியின்
கல்வி அலுவலர் மருத்துவர் P.பாலாஜி M.D., அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் 60 ஆண்டுகால பெருமைமிகு பயணத்தை கொண்டாடும் இந்நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
செய்தியாளர்
மாருதி மனோ
