இரண்டு குழந்தைகளுக்கு காது மற்றும் உள்நாக்கு அன்னப்பிளவால் அவதிப்படும் இரு குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் நிதி உதவி அளித்து குழந்தைகளின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை .!

கிருஷ்ணகிரி

இரண்டு குழந்தைகளுக்கு காது மற்றும் உள்நாக்கு அன்னப்பிளவால் அவதிப்படும் இரு குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் நிதி உதவி அளித்து குழந்தைகளின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை .!

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு காது மற்றும் உள்நாக்கு அன்னப்பிளவால் அவதிப்படும் இரு குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் நிதி உதவி அளித்து குழந்தைகளின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி வீரப்பன் நகரை சேந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி காயத்திரி ஆகியோருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண முடிந்த நிலையில் இவர்களுக்கு கவின் 
வயது 5, இனியா 1 வயது ஆகிய இரு குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் கவினுக்கு காது கேட்பது இல்லை, இனியாவுக்கு உள் நாக்கு வாய் பிளவு காரணமாக உணவு உட் கொள்ள முடியால் குழந்தை தவித்து வருகிறது.

மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வரும் இவர்கள் குழந்தைகளின் சிகிச்சைக்காக  பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சைகள் மேற்கொண்டு எந்த பயனும் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதை அறிந்த  கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் உடனடியாக காயத்திரியின் குழந்தைகளை பார்வையிட்டு முதல் கட்டமாக கவினின் காது கேட்கும் வகையில் சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவி மற்றும் குழந்தை இனியாவுக்கு உள்நாக்கு அன்னப்பிளவினை அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்ய  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கூறிய காயத்திரி....
மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் குறைபாடுகளுடன் பிறந்துள்ளது.

இதனை சரி செய்ய மருத்துவர்களையும் அணுகியும் எந்த முன்னேறமும்  இல்லை தற்போது எங்களை அழைத்து நகர் மன்ற தலைவி திருமதி பரிதா நவாப் தன்னுடைய குழந்தை கவினுக்டு  காது கேக்கும் கருவி மற்றும் இளைய மகள் இனியாவின் உள்நாக்கு  அன்னப்பிளவினால் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய  தாய் உள்ளத்தோடு உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது மனசுக்கு ஆறுதலாக உள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், கிருஷ்ணகிரி நகர் மன்றத் தலைவி திருமதி பரிதா நவாப் ஆகியோருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ