தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்.!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்.!

கிருஷ்ணகிரியில்  தமிழக விவசாயி சங்கத்தின் உயர் மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்த நாளினை மாவட்டங்கள் தோறும் மிகச் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமியின் 
100-வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
 
சங்கத்தின் மகளிர் அணி தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் அனுமந்தராசு, மாவட்டத் துணைத் தலைவர் சந்திரசேகர் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த வெங்கடேசன், சீனிவாசன், ராஜா, கோவிந்தன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்,

மேலும் இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இராமகவுண்டர் பாலுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதும் பால் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும், உயர் மட்ட பரிந்துறையின்படி வன விலக்குகள் மற்றும் மயில் போன்ற பறவைகளால்  பாதிக்கப்படும் விவசாயப் பயிர்களுக்கு உண்டான இழப்பீடுகளை முழுமையாக வழங்க வேண்டும், காட்டுயானைகள் மற்றும் வனவிலங்குகளால் தாக்கி பலியாகும் விவசாயிகளின் குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், மேலும் வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி விவசாயிகளின் பாதுகாவலனாகவும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனருமான 
ஜயா நாரயணசாமியின் 100-வது பிறந்த நாளினை தமிழகம் முழுவதும் 
வெகு விமர்ச்சியாக கொண்டப்பட உள்ளது, இந்த விழாவில்  விவசாயிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

அப்போது தமிழக விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த கண்ணையன், வரதராஜ், கோவிந்தராஜ், முருகன், ராஜன், சத்திவேல் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மாருதி மனோ