தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் பாண்டிச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் சுவாமி தரிசனம் செய்தார் !
தென்காசி

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் பாண்டிச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் சுவாமி தரிசனம் செய்தார்
தென்காசி அக் 08
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த பாண்டிச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தென்காசி காசி விஸ்வநாதர்
உலகம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியில் தொழில் துறையில் முன்னேற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்பதற்காகவும், ஜோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோரை சந்திப்பதற்காக இன்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்ததாகவும் மாவட்ட தலைவர், மற்றும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்றும், 2026 தேர்தலை பற்றிய கேள்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது வரும் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்றும் தெரிவித்தார்.
கரூர் விவகாரம் பற்றிய கேள்விக்கு சிபிஐ விசாரித்தால் தான் தீர்ப்பு சரியாக அமையும் பிரதமர் மோடி தலைமையில் பொது மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல் படுத்தி நல்லாட்சி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
உடன் பாரதிய ஜனதா கட்சி தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, மாவட்டத் துணைத் தலைவர் முத்துக் குமார்,மகளிர் அணி மாவட்ட தலைவர் குணசீலா, தென்காசி நகர தலைவர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்