திமுக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் .!
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது
தென்காசி செப் 05
தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து மாவட்ட கழக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
இந் நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளரும் ஆலங்குளம் யூனியன் சேர்மனுமான திவ்யா மணிகண்டன், மாவட்ட மகளிர் அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா சுதாகர், உட்பட தலைவர், துணை தலைவர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கழக முப்பெரும் விழாவில் கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு முப்பெரும் விழாவில் பெரியார் விருதுக்கு தேர்வு செய்த கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்க்கு நன்றி தெரிவிப்பது
12.09.2025 அன்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் கனிமொழி கருணாநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது
கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்