காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி.துறை சார்பாக ஓட்டு திருட்டுக்கு எதிராக கையழுத்து இயக்கம் .!
கிருஷ்ணகி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் உத்தரவின்படி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி.துறை சார்பாக ஓட்டு திருட்டுக்கு எதிராக கையழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
மத்திய அரசு வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடித்துள்ளதை சுட்டிகாட்டும் விதமாக நாடு முழுவதும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவின் படி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்கு திருட்டு குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி.துறை சார்பாக ஓட்டுத் திருட்டுக்கு எதிராக கையழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறையின் மாநிலத் தலைவர் நவீன் மற்றும் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியாரின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் எல் சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மோடி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓட்டு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஓ.பி.சி. மாவட்டத் தலைவர் கவியரசன் தலைமையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்கு சீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தங்களது கையெழுத்தினை பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வராஜ், சுந்தர் முரளி, லோகேஷ், சின்னசாமி, ராஜ்குமார், அருண், எல்லப்பன், பானிபூரி, குப்புசாமி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மீன் கடை வெள்ளை குட்டி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ