தென்காசி வியாபாரிகள் நலச்சங்க 8வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் .!

தென்காசி

தென்காசி வியாபாரிகள் நலச்சங்க 8வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் .!

தென்காசி வியாபாரிகள் நலச்சங்க 8வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

தென்காசி அக் 13

தென்காசி வியாபாரிகள் நல சங்க 8 வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் குற்றாலம் 
கே ஆர் பங்களாவில் வைத்து நடை பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தென்காசி வியாபாரிகள் நல சங்க தலைவர் பரமசிவன்,  துணைத் தலைவர் ஜெபராஜ், கௌரவ தலைவர் கலீல்ரகுமான்,
கௌரவ ஆலோசகர்கள் அழகுராஜ், மாரியப்பன், கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

துணைச் செயலாளர் இளங்கோ, சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சந்திரமதி ராஜா, கண்ணன்  வரவேற்புரை ஆற்றினர் ஆண்டு அறிக்கையினை ரசூல் தீன் வாசித்தார்..தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ், கூடுதல் செயலாளர் காளிதாசன், பழனி நாடார் எம்எல்ஏ நகர மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இஸ்மாயில், நாராயண சிங்கம், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முகமது இப்ராஹிம், கணேசன், கலைவாணன், கந்தசாமி, ஆறுமுகசாமி, ஆனந்தவேல், வைரவேல் ,ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு 52 வயதுக்கு மேல் மாதந்தோறும் பென்ஷன் திட்டம் கொண்டுவர தமிழக அரசு வழிமுறை செய்ய வேண்டும், தென்காசி மாவட்டத்தில் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள்  நிறை வேற்றப் பட்டன.முடிவில் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்