தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க 3ம் ஆண்டு திருமண வரன் அறிமுக மாநாடு.!
தென்காசி

தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க 3ம் ஆண்டு திருமண வரன் அறிமுக மாநாடு.!
திரளான சைவபெருமக்கள் பங்கேற்பு
தென்காசி அக் 13
தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு திருமண வரன் அறிமுக மாநாடு தென்காசி சௌந்தர்யா மஹாலில் வைத்து நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சடாட்ஷர சுந்தரம், லோகநாயகி மற்றும் பண்ணை சொக்கலிங்கம், மனோன்மணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
துணைத் தலைவர் செண்பகம், மாவட்ட செயலாளர் நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் ஐயம்பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகத் தலைவர் வழக்கறிஞர் கனகசபாபதி, மாவட்ட துணை தலைவர்கள் சிவஞானம்,
சிவசங்கர், துணைச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சடாட்ஷர சுந்தரம், சொக்கலிங்கம் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
மாவட்ட அமைப்பு செயலாளர் ஐயம் பெருமாள், மாணிக்கம், லட்சுமணன், பேச்சி முத்து சங்கர், திருமலை, பெரியநாயகம், அருணாசலம் என்ற பாபு ஆகியோர் திருமண தகவல் பதிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார் சங்கர நாராயணன் நாகராஜன் சங்கர குமார் குப்புசாமி காந்திமதி நாதன் சக்திவேல் பாலன் அருணாசலம் முருகன் ஐயப்பன் நடராஜன் பாலமுருகன் முத்துவேல் சௌந்தர பாண்டியன் ராமன் நல்லதம்பி வள்ளிநாயகம் சேதுராமலிங்கம் மற்றும் ஏராளமான சைவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
முதல் ஆண்டு திருமண தகவல் மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட 671 வரன்களின் பட்டியலில், 188 திருமணங்களும், 2ம் ஆண்டு 450 வரன்கள் பட்டியலில் 115 திருமணங்களும் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்