ஆயுத பூஜையை முன்னிட்டோ 5 நாட்கள் விடுமுறை, தமிழ்நாடு அரசு அறிவிப்பு. !
தமிழ்நாடு அரசு

சென்னை: அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை, 2ஆம் தேதி விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4, 5 தேதிகளில் சனி ஞாயிறு விடுமுறை வரும் நிலையில் மூன்றாம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆயுத பூஜைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை (செப். 30, செவ்வாய்க்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி இருப்பதால் தொடர்ச்சியாக 2 நாள் விடுமுறை இருக்கிறது. இதற்கிடையில், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறையிலிருந்து, பலர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக, கிளாம்பாக்கம், கோயம்பேடு போன்ற இடங்களில் இருந்து சிறப்புப் பஸ்கள், சென்ட்ரல், எழும்பூர் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று வரை சிறப்புப் பஸ்கள் மூலம் 1 லட்சம் பேர், சிறப்பு ரயில்கள் மூலம் 3 லட்சம் பேர், மொத்தம் 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆயுத பூஜை
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றி செல்லும் வகையில், தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீஸ், சென்னை பெருநகர் காவல்துறை மற்றும் ஆவடி காவல்துறை இணைந்து போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் ஆவடி பகுதி கனரக வாகனங்கள் பூந்தமல்லி வழியாகத் திருப்பி, ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலை அடைய வேண்டும்.
சென்னை போக்குவரத்து மாற்றம்
மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் செல்லும் வாகனங்கள், மாற்றுப்பாதை வழியாக, ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியில் செல்ல வேண்டும் எனவும், ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசலைத் தவிர்க்க: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பழைய மாமல்லபுரம் சாலை அல்லது கிழக்கு கடற்கரை சாலை (ECR) பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு விடுமுறை
இந்த நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தனர். அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி ஆயுத பூஜையும், இரண்டாம் தேதி விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காம் தேதி சனிக்கிழமையும், ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வரும் நிலையில் அந்த இரண்டு நாட்களும் விடுமுறைதான்.
அக்டோபர் 3ஆம் தேதி விடுமுறை
இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது. அதாவது அக்டோபர் மூன்றாம் தேதியான வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்தால் நீண்ட விடுமுறையை கொண்டாட ஏதுவாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் மூன்றாம் தேதியை பொது விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
சிறப்பு பேருந்து
இதை அடுத்து தென் மாவட்டங்களுக்குச் சென்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்குவது குறிப்பிடத்தக்கது.