கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ச. தினேஷ்குமார் இ.அ.ப. அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் பூர்த்தியாகாமல் காலியாக உள்ள 21 (இருபத்து ஒன்று) *Left over Seats* - க்கான பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை *walk in Interview* மூலம் தகுதியான மாணவ/ மாணவிகள் தெரிவு செய்யப்படும்.
கீழ்க்கண்ட பாடப் பிரிவுகளான இதய அதிர்வலை மற்றும் அழுத்த பரிசோதனை பாடப்பிரிவில் (2) இரண்டு இடங்களும், அவசர சிகிச்சை பிரிவு நுட்புனர் பாடப்பிரிவில் (4) நான்கு இடங்களும், டயாலிசிஸ் டெக்னீசியன் பாடப்பிரிவில் (2) இரண்டு இடங்களும், மயக்கவியல் நுட்புணர் பாடப்பிரிவில் (2)இரண்டு இடங்களும், அறுவை அரங்க உதவியாளர் பாடப்பிரிவில் (4) நான்கு இடங்களும், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு பாடப்பிரிவில் ஆண்களுக்கு மட்டும் (7) ஏழு இடங்களும் என மொத்தம் 21 இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களில் 17 ( பதினேழு ) வயது நிரம்பியவர்கள் நேரடி சேர்க்கை மூலம் (walk in Interview) சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் அலுவலக வேலை நாட்களில் உடனடியாக நேரில் வருகை தந்து சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, கல்விக் கட்டணம் ரூபாய் 1450/- மட்டுமே.
நேரடி சேர்க்கையின் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் (பொருந்துமாயின்), ஜாதி சான்றிதழ் வயது சான்றிதழ்
(பள்ளிச் சான்றிதழ்/ பிறப்புச் சான்றிதழ்), மாற்றுத்திறனாளி முக எனில் மருத்துவ குழுவினால் பெறப்பட்ட சான்றிதழ் ஆதார் அட்டை.