மேம்பாலம் அமைப்பது குறித்து, ஓசூர் Fort வளாக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் பத்தலப்பள்ளி மார்கெட் அருகில் மேம்பாலம் அமைப்பது குறித்து, ஓசூர் Fort வளாக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் பத்தலப்பள்ளி மேம்பாலம் அமைப்பது குறித்தும், சர்வீஸ்சாலை அமைப்பது குறித்தும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து குறு சிறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓசூர் குடியிருப்போர் நல சங்கப் பிரதிநிதிகள் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி. கவிதா ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ