கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக முகவர்கள் மற்றும் நுகர்வோர் காலாண்டு கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலக முகவர்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் எழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக முகவர்கள் மற்றும் நுகர்வோர் காலாண்டு கூட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் பார்த்தீபன் அவர்களின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்திற்கு தலைமை தபால் நிலை அதிகாரி புவனேஷ்வரன் தலைமை தாங்கினார்.
அஞ்சலகத்தின் துணை அதிகாரி ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது தபால் நிலையத்தில் தபால் முன்பதிவு செய்யும் நேரத்தை 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உயர்த்தப்பட வேண்டும்,
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் குறித்து கிராமங்கள் தோறும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், தபால் நிலையத்தில் டெபாசிட் செய்ய அஞ்சலக முகவர்கள் கொண்டு வரும் பணத்தினை திருப்பி அனுப்பாமல் உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும், கிராம அஞ்சலக ஆயுள் காப்பீட்டு குறித்து ஏதாவது புகார்கள் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்தக் கூட்டத்திற்கு நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன் மற்றும் அஞ்சலக முகவர்களான சகோதரராமன், சசிதரன், சதீஷ், உதயநிதி, அசோக்குமார், சசிகலா, உமா மகேஷ்வரி, உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ