குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இட்லி கடை படம் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தனுஷ் ரசிகர்கள் மேள தாளம் அடித்து கொண்டாட்டம்.!
இட்லி கடை
குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இட்லி கடை படம் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தனுஷ் ரசிகர்கள் மேள தாளம் அடித்து கொண்டாட்டம்.
இட்லிக் கடை படத்தின் பெயருக்கேற்ப படம் பார்க்க வந்தவருக்கு இட்லி கறிக்குழம்பு இலவசமாக வழங்கினர்.
சென்னை குரோம்பேட்டை வெற்றித் திரையரங்கில் இன்று தனுஷ் நித்யா மேனன் நடித்த இட்லி கடை திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
https://youtube.com/shorts/LmgHJ5KVNi4?si=GQwpgIwFsU6ut9mq
தனுஷின் ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆனதை கொண்டாடும் விதமாக மேள தாளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
அதோடு மட்டுமில்லாமல் திரைப்படத்தின் பெயர் இட்லி கடை என்பதால், காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைமை சார்பில் தனுஷ் ரசிகர்கள் திரையரங்கு வாயில் அருகில் இட்லி கடை ஒன்றை நிறுவி படம் பார்க்க வருவோர்களுக்கு இலவசமாக இட்லி கறிக்குழம்பு வழங்கி சிறப்பித்தனர்.
இட்லி கடை திரைப்படம் தனுஷ் ரசிகர்கள் இலவசமாக இட்லி வழங்கி வித்யாசமாக கொண்டாடி வருகின்றனர்.
செய்தியாளர்
S S K