வேளச்சேரியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவு வழங்கப்பட்டது. !
சென்னை
வேளச்சேரியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவு வழங்கப்பட்டது.
சென்னை வேளச்சேரி நேரு நகர் 175 வது வட்டத்தில் எம்ஜிஆர் மன்றத்தில் பாரத ரத்னா புரட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் மன்ற இளைஞரணி தலைவர் ச.சங்கீத் ஏற்பாட்டில், சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.கே.அசோக் தலைமையில், பகுதி கழக செயலாளர் சிவசுப்ரமணி, வட்ட கழக செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
முன்னதாக எம்ஜிஆர் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
S S K
