இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் எம் பி யின் முகாம் அலுவலக டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு மேலும் ஒருவர் படுகாயம். !

சென்னை

இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் எம் பி யின் முகாம் அலுவலக டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு மேலும் ஒருவர் படுகாயம். !

சென்ன ஈ. சி ஆரில். விபத்து இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல் எம் பி யின் முகாம் அலுவலக டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


எம் பி..யின் ரெகுலர் டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி


விபத்தை ஏற்படுத்திய பள்ளிச் சிறுவனின் தந்தை கைது


அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடவடிக்கை


சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 50. 

அடையாறில் உள்ள ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நவாஸ் கனியின் ஓட்டுநர் முகமது இஸ்மாயில் (வயது 49) இருவரும் நேற்று இரவு பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

இஸ்மாயில் வாகனத்தை ஓட்ட சுரேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.


கொட்டிவாக்கம் அரசு டாஸ்மாக் கடை அருகே இருசக்கர வாகனம் சென்றபோது,

தவறான திசையில் பள்ளி சிறுவன் ஓட்டி வந்த வாகனம் இவர்கள் சென்ற வாகனம் புது மோதியது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


படுகாயம் அடைந்த இஸ்மாயில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் பள்ளிச் சிறுவன் மீதும் அவரது தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனின் தந்தை முருகனை கைது செய்தனர்.

செய்தியாளர் 

       S S K