40 நாள் தாக்குதலுக்கு பில் போட்ட அமீரகம். ஈரானிடம் கேட்ட பல கோடி இழப்பீடு. பதிலுக்கு போட்ட மெகா ஸ்கெட்ச். அதிர்ச்சியில் உலக நாடுகள்.!!

அமீரகம்

40 நாள் தாக்குதலுக்கு பில் போட்ட அமீரகம். ஈரானிடம் கேட்ட பல கோடி இழப்பீடு. பதிலுக்கு போட்ட மெகா ஸ்கெட்ச். அதிர்ச்சியில் உலக நாடுகள்.!!

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானிடம் இழப்பீடு கோரி புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

கடந்த 40 நாட்களில் வளைகுடா நாடுகளில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட உள்கட்டமைப்பு சேதங்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஏறக்குறைய 2,819 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஈரான் நடத்திய தாக்குதலால் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார மற்றும் உயிரிழப்பு பாதிப்புகளுக்கு ஈடாக உரிய தொகையை ஈரான் வழங்க வேண்டும் என்பது அமீரகத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஈரான் தனது பகைமையை முழுமையாகக் கைவிடுமா மற்றும் உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் திறக்குமா என்பது குறித்து அமீரகம் தெளிவான விளக்கத்தைக் கோரியுள்ளது.

இந்நிலையில் தான் நேரடியாகப் போரில் ஈடுபடவில்லை என்றும், இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தவே தூதரக ரீதியாக முயற்சிப்பதாகவும் கூறியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி ஈரான் தனது அத்துமீறல்களை நிறுத்த வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது.